» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு
வியாழன் 23, மே 2024 11:10:18 AM (IST)
கயத்தாறு அருகே காணாமல் போன முதியவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (64). இவர் கடந்த 21ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் இவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அங்குள்ள காட்டுப் பகுதியில் அவர் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது உறவினர் சந்தன பாண்டியன் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
