» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார்திருநகரி கோவிலில் அவதார திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

வியாழன் 23, மே 2024 8:50:31 AM (IST)


ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் அவதார திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் 9-ஆவது திருப்பதியும் குருவுக்கு அதிபதியுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் கோவிலில் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலத்திலும் அம்பாள்கள் ஆதிநாயகி, குருகூா்வல்லி ஆகியோரும் ஆகியோருடன் அருள்பாளிக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படும் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விசாகம் அன்று திருஅவதாரம் செய்தார். 

ஆண்டுக்கு நான்கு திருவிழாக்கள் இத்திரு ஸ்தலத்தில் நடைபெறும். மாசி மாதமும் வைகாசி மாதமும் சுவாமி நம்மாழ்வார்க்கும், பங்குனி மாதமும் சித்திரை மாதமும் ஆதிநாதருக்கும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நம்மாழ்வார் அவதாரம் செய்ததை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டுக்கான நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

5-ம் திருநாளான கடந்த 18-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வாா் மங்களாசாசன வைபவம் நடந்தது. மாலையில் 9 நவதிருப்பதி பெருமாள்கள் அருள்பாலித்த கருடசேவை நிகழ்ச்சியும் நடந்தது. சிகர நிகழ்ச்சியான நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், நித்தியல், கோஸ்டி நடந்தது. தொடர்ந்து சுவாமி நம்மாழ்வார் காலை 6 மணிக்கு திருதேரில் எழுந்தருளினார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

தொடர்ந்து காலை 7 மணியளவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் மேல ரதவீதியில் புறப்பட்டு வடக்கு ரதவீதி, கீழரதவீதி, தெற்குரதவீதி வழியாக மேலரதவீதியில் காலை 9.45 மணியளவில் நிலையை சென்றடைந்தது. இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory