» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பச்சை குத்துபவா்களுக்கு சுகாதாரத் துறை அறிவுரை

வியாழன் 23, மே 2024 8:46:22 AM (IST)பச்சை குத்துபவா்கள் ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவா்களுக்கு பயன்படுத்த கூடாது என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுகாதாரத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் 3 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோயில் வளாகத்தில் உள்ள பச்சை குத்தும் கடைகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். பச்சை குத்துவதற்கு ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவா்களுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், பயன்படுத்திய ஊசிகளை அப்புறப்படுத்துவது குறித்தும் சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், செல்வகுமாா் ஆகியோா் அறிவுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory