» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும்: மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

வியாழன் 23, மே 2024 8:27:58 AM (IST)



தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை  அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில்  குமரெட்டியாபுரம், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், மீள விட்டான், பண்டாரம்பட்டி மடத்தூர், பெரியநாயகிபுரம் சிலுவைப்பட்டி, புதுத்தெரு, டூவிபுரம், தேவர்காலனி, VMS நகர் உட்பட  பல பகுதிளில் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. பொதுமக்கள் திரளானோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மக்களின் தலையாய கோரிக்கை "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே வந்தாச்சி, ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தாமதம் ஏன்?" என்ற கேள்விதான். தமிழக அரசிடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் இந்த நேரத்தில் நமது மக்கள் கூட்டமைப்பின் சார்பிலும் இதே கேள்வியை நாமும் கேட்கிறோம். தூத்துக்குடி மக்களையும், மண்ணையும் காப்பதற்கு தன்னுயிரை ஈந்த  ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள். காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 6 வருடம் ஆகிறது.

உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசும் சிறப்பாக வாதாடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உத்தரவு பெற்றது. ஆனால் ஆலை அகற்றப்படாமல் உள்ளதால் மீண்டும் சீராய்வு மனு என்று சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளில் ஆலை நிர்வாகம் நுழைந்து விடக்கூடாது. மக்களிடம் வாக்குறுதி அளித்தபடி தமிழக முதல்வர் அவர்கள் தூத்துக்குடியிலிருந்து நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை  அகற்ற (DISMANTLE) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றவாளிகளை அடையாளம் காட்டி, குற்றவியல் நடவடிக்கை, நிர்வாக துறை நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் பரிந்துரைத்தும் இதுவரை தமிழக அரசு குற்றவாளிகள் மீது  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்திலும் "பரிந்துரையை செயல்படுத்துவது அரசின் விருப்பம், கட்டாயம் கிடையாது" என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். அதே போல 2022 அக்டோபரில் இது சம்பந்தமாக பிறப்பித்த தமிழக அரசாணையிலும் "துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது" என்பதும் அதிர்ச்சியானது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆனால் மக்கள் மன்றத்தில் முதல்வர் உறுதி கூறியது போல உயர் காவல் அதிகாரிகள் உட்பட கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் அதற்கு உரிய சட்ட பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவு மணிமண்டபம் தூத்துக்குடியின் மையப்பகுதியில் கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory