» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா

வியாழன் 23, மே 2024 8:24:38 AM (IST)


வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை  நடைபெற்றது. 

முருகப்பெருமானின் நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திரத்தன்று வைகாசி விசாகத் திருவிழா முருகன் ஆலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடியில் அமைந்துள்ள  பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் வைகாசி விசாகத் திருவிழா முன்னிட்டு முருகப் பெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார் வீதி உலா வந்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

செண்பகவல்லி அம்மன் கோவிலில்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு விநாயகர், முருகன், சுவாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு விநாயகர், முருகர், வள்ளி - தெய்வானை, செண்பகவல்லி அம்பாள், பூவனநாத சுவாமி, சண்டீகேஸ்வரர் சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory