» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

வியாழன் 23, மே 2024 8:11:14 AM (IST)தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ந் தேதி நடந்தது. இதில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மையம் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதற்காக 109 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 116 உதவியாளர்கள், 124 நுண் பார்வையாளர்கள் ஆக மொத்தம் 349 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் விதிகளின்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமிபதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரபு (தூத்துக்குடி), சுகுமாறன் (திருச்செந்தூர்), விக்னேசுவரன் (ஸ்ரீவைகுண்டம்), கல்யாணசுந்தரம் (ஓட்டப்பிடாரம்), உஷா (விளாத்திகுளம்), ஜேன் கிறிஸ்டிபாய் (கோவில்பட்டி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜகுரு, தேர்தல் பிரிவு தாசில்தார் தில்லைப்பாண்டி மற்றும் தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory