» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த கோரிக்கை

புதன் 22, மே 2024 5:09:31 PM (IST)

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கே.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக 6 ஆண்டுகளில் 8 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தர உள்ளதாக அறிவித்துள்ளது. 

இதற்காக முதல் ஆண்டுக்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கிடு செய்துள்ளதாகவும் திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமாக செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 இலட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

ஆனால், ஏழை,எளிய நடுத்தர மக்களுக்கு நீண்டகால வீட்டுவசதி கடன்கள் வழங்குவதற்கென்றே பிரத்யேகமாக தமிழகம் முழுவதும் 650க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், குறுகிய கால மற்றும் மத்திய கால விவசாயக் கடன்கள் வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு இத்திட்டத்தை ஒதுக்கீடு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கதாகும்.

ஏனெனில், வீட்டுவசதிக் கடன்கள் நீண்டகால தவணைகளை கொண்டதாக இருந்தால் மட்டுமே எளிய மக்கள் பயன் பெற முடியும். ஆனால், தற்போது கடனின் தவணை காலம் 3 முதல் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயனாளிகளுக்கு சிரமத்தை கொடுக்கும். 

எனவே, சுமார் 12 இலட்சம் வீடுகளுக்கு நீண்டகால கடன்கள் வழங்கிய அனுபவம் கொண்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான கடன்கள் வழங்கப்பட்டால் இச்சங்கங்கள் புத்துயிர் பெறுவதோடு 5 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளமின்றி தவித்து வரும் ஆயிரக்கணக்கான பணியாளர்களும் மறு வாழ்வு பெறுவர் என்பதால், தமிழக அரசு இதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் கருத்து

எவன்மே 25, 2024 - 12:18:45 PM | Posted IP 162.1*****

கலைஞர் பெயரை கேட்டால் எங்கும் ஊழல் ஊழல் தான்

Karthikமே 22, 2024 - 10:31:08 PM | Posted IP 162.1*****

இந்த திட்டத்தை கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்திற்கு கோடுத்து உதவி அவர்கள் வீடு விளக்கு ஏற்றி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

Niranjan.Pமே 22, 2024 - 10:27:18 PM | Posted IP 162.1*****

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கே வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் நலன் பெறும்

Priyadharshiniமே 22, 2024 - 10:25:53 PM | Posted IP 172.7*****

The above scheme is vry useful. But that scheme can issued to the housing cooperative society that employees are vry sick to get the monthly salary. So that scheme was helpful for that employees getting salary. So far please help that employees house too got the light of bright future.

பிரதீப்மே 22, 2024 - 10:18:39 PM | Posted IP 162.1*****

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கே வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் நலன் பெறும்

சுரேஷ்மே 22, 2024 - 10:16:33 PM | Posted IP 172.7*****

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கே வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் நலன் பெறும்

Ramprasathமே 22, 2024 - 10:15:08 PM | Posted IP 162.1*****

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கே வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் நலன் பெறும்

Ramprasathமே 22, 2024 - 10:14:55 PM | Posted IP 172.7*****

Ramprasathமே 22, 2024 - 10:14:55 PM | Posted IP 162.1*****

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கே வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் நலன் பெறும்

Ramprasathமே 22, 2024 - 10:14:55 PM | Posted IP 172.7*****

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கே வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் நலன் பெறும்

Selviமே 22, 2024 - 10:07:10 PM | Posted IP 172.7*****

மேற்கண்ட திட்டத்தை கூட்டுறவு வீட்டுவசதி சங்கதத்திற்கே கொடுத்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

Sidharthiniமே 22, 2024 - 09:50:45 PM | Posted IP 172.7*****

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory