» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் சென்று ஆடு திருடிய 2 பேர் கைது!

புதன் 22, மே 2024 8:49:59 AM (IST)

கயத்தாறு அருகே மோட்டார் பைக்கில் சென்று ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு ஆத்திகுளம் மேலத்தெரு விஜயராஜ் மகன் முத்துப்பாண்டி (37). இவர் விவசாயம் மற்றும் ஆடு மேய்த்தல் தொழில் செய்து வருகிறார். இவர், சுமார் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் உள்ள ஆட்டுத்தொழுவத்தில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம். 

இந்த நிலையில் நேற்று மாலையில் ஆடுகளை மேய்த்து வந்த அவர், இரவு 7 மணிக்கு ஆட்டு தொழுவில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் தொழுவில் இருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினருடன் அவர் சென்றுள்ளார்.  அப்போது 2 வாலிபர்கள் ரூ. 8ஆயிரம் மதிப்புள்ள செம்மறி ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். 

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் வழக்கு பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், வடக்கு இலந்தைகுளம் மாரிமுத்து மகன் மணிகண்டன் (21),அதே ஊரைச் சேர்ந்த பூல்பாண்டி(29) என தெரியவந்தது. தொடர்ந்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory