» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மார்க்கெட்டில் வியாபாரியை அரிவாளால் தாக்கிய சிறுவன் கைது
புதன் 22, மே 2024 8:46:12 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் வியாபாரியை அரிவாளால் தாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் திசைக்கரை ராஜா (45). வியாபாரி. இவர் தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்காக 4 மர்ம நபர்கள் வந்து உள்ளனர். அப்போது, அந்த கடையில் ஆள் இல்லாததால், 4 பேரும் கடைக்குள் சென்று பொருட்களை எடுத்து உள்ளனர்.
இதனை பார்த்த திசைக்கரை ராஜா, கடையில் ஆள் இல்லாத போது, எதற்காக கடைக்குள் சென்று பொருட்களை எடுக்கிறீர்கள் என்று சத்தம் போட்டு உள்ளார். இதனால் அவருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை திரும்பி பிடித்து, திசைக்கரை ராஜாவின் தலையில் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்களாம்.
இதில் காயம் அடைந்த திசைக்கரை ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுவன் உள்ளிட்ட 4 பேர் வியாபாரியை தாக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். வ.உ.சி. மார்க்கெட்டில் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
Samsdeenமே 22, 2024 - 01:53:18 PM | Posted IP 162.1*****
இன்றைக்கு அதிக அளவில் இது மாதிரி யான சம்பவங்களில் அதிகம் சிறுவர்கள் தான் பிரச்சனையில் ஈடுபடுகிறார்கள் அதற்குக் காரணம் போதை பொருள்கள் தான் போதைகளை பயன்படுத்திக் கொண்டு இது மாதிரி பிரச்சினைகளிலும் திருடுகளிலும் அதிகம் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள் இதை தட்டி கேட்டால் கொலை செய்யும் அளவிற்கு ஆயுதங்களுடனே சென்று கொண்டிருக்கிறார்கள் இதில் இந்த சிறுவர்களுக்கு ஆதரவாக அவர்களின் பெற்றோர்களே இருப்பது பெரும் வேதனையாக உள்ளது பெற்றோர்கள் சரியான கண்டிப்புடன் நடந்து கொள்வதில்லை அதனால்தான் இப்போது சிறுவர்களால் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்னும் நடக்கும் நடந்து கொண்டே தான் இருக்கிறது இதற்கெல்லாம் சரியான நடவடிக்கைகள் தேவை இல்லை என்றால் இன்னும் விபரீதங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் பாதிக்கப்படுபவர்கள் பாதிப்பு கொண்டே தான் இருப்பார்கள்
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

ஓட்டு போட்ட முட்டாள்மே 23, 2024 - 08:59:12 AM | Posted IP 162.1*****