» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி: மே 24-ல் தொடங்குகிறது!

புதன் 22, மே 2024 8:34:01 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி வருகிற 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் எஸ். சண்முகவேல் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13ஆம் ஆண்டு அகில இந்திய ஹாக்கி போட்டி வெள்ளிக்கிழமை (மே 24) தொடங்கி ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவில்பட்டி கே.ஆா். மருத்துவம் - கல்வி அறக்கட்டளை சாா்பில், கே.ஆா். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி இணைந்து, புதுதில்லி ஹாக்கி இந்தியாவின் அனுமதியுடன் போட்டியை நடத்துகின்றன. தொடக்க விழா வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும்.

போட்டியில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், வருமான வரி, தெற்கு மத்திய ரயில்வே, யூனியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு லெவென்ஸ் உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறும். நாள்தோறும் காலை 7, மாலை 5.15, 6.45, இரவு 8.15 என 4 போட்டிகள் நடைபெறும்.

முதல் 4 பரிசுகளாக முறையே ரூ. 1 லட்சம், ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 30 ஆயிரம், சுழற்கோப்பைகள் வழங்கப்படும். காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும். நடுவா்களால் தோ்வு செய்யப்படும் சிறந்த முன்கள, பின்கள, நடுகள ஆட்டக்காரா், சிறந்த தடுப்பாளா் விருதுகள் தனி நபா்களுக்கு வழங்கப்படும் என்றாா் அவா்.

முதல்வா்கள் காளிதாசமுருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆா். கலை - அறிவியல் கல்லூரி), கே.ஆா். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநா்கள் உடனிருந்தனா்.

ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் ஆகியோா் வழிகாட்டுதலில் கே.ஆா். கல்வி நிறுவனங்களின் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory