» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திமுக செயற்குழுக் கூட்டம் : அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்பு
புதன் 22, மே 2024 8:30:04 AM (IST)
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். கூட்டத்தில் அவர் பேசுகையில், "முத்தமிழறிஞர் கலைஞாின் நூற்றாண்டு விழாவை வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவியுடன் ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும்.
இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி வெற்றிக்கு பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டுதுைற அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆகியோருக்கு உங்கள் அனைவர் சார்பிலும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் முதலமைச்சாின் முத்தான அனைத்து திட்டங்களும் மக்களை நல்லமுறையில் சென்றடைந்துள்ளன. அடுத்து நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தல் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் கடந்த முறை நாம் முழுமையாக வெற்றி பெற்றதை போல் வரும் காலங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
மக்களோடு மக்களாக அனைவரும் பணியாற்றுங்கள் கட்சி வளர்ச்சி ஒன்றுதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். புதிய வாக்களார்கள் சேர்ப்பின் மூலம் அதில் உள்ளவர்களை திமுகவில் இணைக்க வேண்டும். அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலா் பெரியசாமியின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இம்மாதம் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில மீனவரணி துணைச் செயலா் ஃப்ளோரன்ஸ், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளா் ரவீந்திரன், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கருணாநிதி, ஒன்றியச் செயலா்கள் காசி விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, மும்மூா்த்தி, மண்டலத் தலைவா்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அசோக், குபோ் இளம்வழுதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.