» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 21, மே 2024 8:16:41 PM (IST)

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் (2024-25) கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜுன் மாதம் முழுவதும் நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) ஜமுனா ராணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு கல்லூரியில் நேரடியாக இடம் கிடைக்காமல், கல்வி பயில முடியாத மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இதில் சேர்ந்து படித்து பட்டங்களைப் பெற இயலும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் உள்ள பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் அனைத்தும் யூஜிசி அங்கீகாரம் பெற்றது.

சேர்க்கையானது இணையதளம் மூலம் நடைபெற உள்ளதால் சேர்க்கைக்கு வர விரும்புவோர் தங்களது ஆதார், பாஸ்போர்ட் புகைப்படம், கையெழுத்து, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், 10ஆம், 12ஆம் அல்லது இளங்கலை சான்றிதழ் நகல்களை jpeg, jpg format ல் ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு கல்லூரிப் பேராசிரியையும், திறந்த நிலைப் பல்கலைக்கழக பொறுப்பாசிரியருமான பிரேசில் (9445641770) தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory