» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம்!
செவ்வாய் 21, மே 2024 4:16:38 PM (IST)
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அஞ்சலக அடையாள அட்டை' எனும் சேவை மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியுடன் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும்.
இதனை முகவரிச் சான்றாக வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் சான்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சலக அடையாள அட்டையினை பொதுமக்கள் அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை ரூ.20/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இதனை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று அந்த பகுதி தபால்காரர் மூலம் சரிபார்க்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.250/- பதிவுத்தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22/- அதிகமாக செலுத்த வேண்டும். இந்த அட்டை மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும். ஆதார் அட்டை முகவரி மாற்றம் செய்ய இதனை ஒரு சான்றாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையில் மதுபானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் : பாஜக கோரிக்கை
புதன் 19, மார்ச் 2025 3:24:03 PM (IST)

தூத்துக்குடியில் புதிய பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் : மேயர் தகவல்
புதன் 19, மார்ச் 2025 3:17:23 PM (IST)

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)
