» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் 38 சக்கர நாற்காலிகள் வழங்கல்!

திங்கள் 20, மே 2024 9:30:05 PM (IST)தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் (CSR) நாகர்கோவில் மாநகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் ஸ்பான்சர் செய்துள்ளது. வங்கியின் பொது மேலாளர் அசோக்குமார், PD&RM துறை ராஜா, திருவனந்தபுரம் மண்டல மேலாளர் ராம்குமார், மார்க்கெட்டிங் அலுவலர் சிவசங்கர், நாகர்கோவில் கிளை மேலாளர், மற்றும் தமிழ்நாடு மெர்க்ன்டைல் வங்கி அதிகாரிகள் முன்னிலையில், சக்கர நாற்காலியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வங்கியின் பொது மேலாளர் அசோக்குமார் வழங்கினார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர்பெற்ற பழைமை வாய்ந்த தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 558 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory