» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி புகார் : துணை பதிவாளர் விசாரணை!

திங்கள் 20, மே 2024 5:04:59 PM (IST)



கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு தொடர்பாக வாடிக்கையாளர்கள் அளித்த புகார் குறித்து கூட்டுறவு துணை பதிவாளர் சக்தி பெமிலா விசாரணை நடத்தினார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு தொடர்பாக சங்க செயலாளர் அகமது, ஊழியர்கள் அமுதா, சுப்பிரமணியன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுமேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சங்கத்தை நிர்வாகிக்க பொறுப்பு அதிகாரிகளாக சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் எட்வின் தேவாசீர்வாதம், ராமகிருஷ்¢ணன், முத்துக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையி¤ல் கடந்த 18ஆம்தேதி முறைகேடு தொடர்பாக கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது சங்க வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் சங்க அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன், உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ், ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 20 ஆம்தேதி சங்க அலுவலகத்தில் வைத்து கூட்டுறவு அதிகாரிகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர் 

இதனையடுத்து கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு துணை பதிவாளர் சக்தி பெமிலா, புகார் தெரிவித்த வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்களை அழைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் , எட்வின் அருள்ராஜ் முன்னிலையில் இன்று (திங்கள்கிழமை) பேச்சு வார்த்தை நடத்தினார். கோமானேரி ஊராட்சி துணைத் தலைவர் ஐக்கோர்ட் துரை, சாலைபாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ், முன்னாள் சங்க துணைத் தலைவர் இசக்கிமுத்து, ஒய்வு பெறற கால்நடை மருத்துவர் அனந்த பெருமாள், வடக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட மகளிர் சுய குழுவி¢னர்கள் கலந்து கொண்டனர். 

தற்போது தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உங்களது கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து

Sivagnanamமே 21, 2024 - 08:48:42 PM | Posted IP 172.7*****

தமிழ்நாடு முழுவதும் மோசடி நடக்க தான் செய்கிறது.... கமிஷன் வாங்கி கொண்டு கண்டுகாமல் இருக்கும் மேலதிகாரிகள்.... அரசு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory