» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலி ஆவணங்கள் மூலம் சுங்க அதிகாரிகளை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி: தூத்துக்குடியில் பரபரப்பு

திங்கள் 20, மே 2024 4:54:55 PM (IST)

தூத்துக்குடியில் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த முந்திரி ஏற்றுமதியாளரிடம் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்தவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கினியா பிசாவு பகுதியைச் சேர்ந்தவர் அர்மன்டோ சில்வா முந்திரி கொட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  இவரை கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவிற்கு சென்ற கேரளாவை சேர்ந்த பெஜில் சுகுமார் என்பவர்  தான் துபாய் மற்றும் கேரளாவில் கொல்லத்தில் பல்வேறு பெயர்களில் முந்திரி ஏற்றுமதி தொழில் செய்து வருவதாகவும் தனக்கு முந்திரி பருப்பு தேவை என கூறி தொடர்பு கொண்டு உள்ளார்.  

இதைத்தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆர்மெண்டோ சில்வா மற்றும் பெஜில் சுகுமார் ஆகியோரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டு 32 கன்டெய்னர்களை தூத்துக்குடி துறைமுகம் வழியாக பெஜில் சுகுமார் இறக்குமதி செய்துள்ளார்.  இதற்காக பணத்தை வங்கிகள் மூலம் பணத்தை கட்டிய பின்பு ஆவணம் முறையாக வந்த பின்பு துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டுமென ஒப்பந்தம் இருந்துள்ளது.  

ஆனால் பெஜில் சுகுமார் இரண்டு கண்டெய்னர்களுக்கு மட்டும் முறையாக பணத்தை அனுப்பி முறையான ஆவணங்களை காண்பித்து எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் தனது மோசடி வேலை யை காண்பிக்க துவங்கிய பெஜில் சுகுமார் மேற்கு ஆப்பிரிக்க ஏற்றுமதியாளரான ஆர்மெண்டோ சில்வாவை ஏமாற்ற துவங்கியுள்ளார் பின்னர் 11 கண்டெய்னர்களுக்கும் தான் 90 நாட்களுக்குள் பணத்தை கட்டி விடுகிறேன் எனக்கு கூறி ஏமாற்றியதுடன் 11 கண்டெய்னர்களை மீண்டும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பெஜில் சுகுமார் எடுத்துக்கொண்டு விற்பனை செய்து விட்டு அதற்கு உரிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளார் 

மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்த 19 கண்டெய்னர்களை  மோசடியாக போலி ஆவணங்கள் தயாரித்து மேற்கு ஆப்பிரிக்க நிறுவனத்திற்கு பணத்தை கட்டி விட்டதாக ஆவணங்களை தயாரித்து சுங்க இலாகா அதிகாரிகளிடம் காண்பித்து 19 கண்டெய்னர்களையும் உடைத்து அதில் இருந்த சரக்குகளை லாரிகள் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு உரிய பணமான சுமார் 6 கோடி ரூபாய் வரை பணத்தை மேற்கு ஆப்பிரிக்கத் நாட்டைச் சேர்ந்த முந்திரி ஏற்றுமதியாளர் ஆர்மண்டோ சில்வாவிற்கு வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும் நான் இங்கு ராஜா உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அர்மென்டோ சில்வாவிடம் பெஜில் சுகுமார் போனில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 45 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்த ஆர்மன்ட்டோ சில்வா தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று அங்கு சுங்க இலாகா அதிகாரிகளிடம் எவ்வாறு போலியான ஆவணங்கள் கொண்டுவந்த பெஜில் சுகுமாருக்கு கண்டெய்னர்களை திறந்து சரக்குகளை ஏற்ற அனுமதி அளித்தீர்கள் என கேட்டுள்ளார் 

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆர்மன்டோ சில்வா கடந்த 45 நாட்களாக தூத்துக்குடியில் இருந்து மோசடியாக விற்பனை செய்யப்பட்ட தனது பொருளுக்கான பணத்தை பெற போராடிவரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் மோசடி பேர்வழி பெஜில் சுகுமார் மீது புகார் அளித்துள்ளார் இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து தனக்கு பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

கேரளாவைச் சேர்ந்தவர் போலி ஆவணங்கள் மூலம் சுங்க இலாகா அதிகாரிகளை ஏமாற்றியதுடன் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

Kochachanமே 20, 2024 - 07:50:43 PM | Posted IP 172.7*****

Kochachan than

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory