» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி

செவ்வாய் 14, மே 2024 4:42:07 PM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள நடு கூட்டுடன் காடு கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் அசோக் குமார் மகன் பிரேம்குமார் (29). இவர் திருநெல்வேலிக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். வாகைகுளம் டோல்கேட் அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத கார் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த பிரேம் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory