» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 11ல் துவக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 14, மே 2024 3:55:11 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி 11.06.2024 முதல் 21.06.2024 வரை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 1433 ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 11.06.2024 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
1. எட்டயபுரம் வட்டம்: மாவட்ட ஆட்சித் தலைவர், தூத்துக்குடி. 11.06.2024 முதல் 21.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
2. ஏரல் வட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர், தூத்துக்குடி. 11.06.2024 முதல் 20.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
3. ஸ்ரீவைகுண்டம் வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் தூத்துக்குடி 11.06.2024 முதல் 19.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
4. சாத்தான்குளம் வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் திருச்செந்தூர் 11.06.2024 முதல் 14.06.2024 முடிய
5. விளாத்திகுளம் வட்டம்: வருவாய் கோட்டாட்சியர், கோவில்பட்டி 11.06.2024 முதல் 21.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
6. திருச்செந்தூர் வட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் (இஸ்ரோ), தூத்துக்குடி 11.06.2024 முதல் 18.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
7. கயத்தார் வட்டம்: உதவி ஆணையர் (கலால்) தூத்துக்குடி 11.06.2024 முதல் 21.06.2024 முடிய(திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
8. தூத்துக்குடி வட்டம்: மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், . தூத்துக்குடி 11.06.2024 முதல் 18.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
9. கோவில்பட்டி வட்டம்: தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), தூத்துக்குடி 11.06.2024 முதல் 18.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
10. ஓட்டப்பிடாரம் வட்டம்: தனித்துணை ஆட்சியர் (இஸ்ரோ), தூத்துக்குடி 11.06.2024 முதல் 21.06.2024 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை, அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
