» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைகாசி விசாகத் திருவிழா: மே 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
செவ்வாய் 14, மே 2024 3:19:42 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 9-ம் தேதி புதன்கிழமை (மே 22) தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 9-ம் தேதி புதன்கிழமை 22.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி ((Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.06.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி., தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:26:28 PM (IST)

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:13:02 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)

K.S.ராகவேந்திராமே 14, 2024 - 03:59:25 PM | Posted IP 162.1*****