» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் செல்போன் பறித்த 2பேர் கைது!

சனி 11, மே 2024 3:57:19 PM (IST)

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, பறித்துச் செல்லப்பட்ட செல்போனை பறிமுதல் செய்தனர்..

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் அப்துல் ரஹீம் (21) என்பவர் நேற்று இரவு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் மேற்படி அப்துல்ரஹீமை வழிமறித்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் வெள்ளிக் கொடியை பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்

இதில், தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் செல்வகுமார் (எ) யானை செல்வம் (27) மற்றும் தமிழ்மணி மகன் ஆனந்த்பாபு (24) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி அப்துல் ரஹீமிடம் செல்போன் மற்றும் வெள்ளி கொடியை பறித்து சென்றது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.20,000 மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ.4,310 பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

Jebarajமே 13, 2024 - 08:45:21 PM | Posted IP 162.1*****

இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையில் மற்றொருவர் எவரும் இச்செயலில் இதுபோன்று ஈடுபடாதவாறு இருக்க வேண்டும் செய்யுமா காவல்துறை? தூத்துக்குடி மாநகரம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது, போக்குவரத்து காவல்துறை தூங்குகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory