» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்குவாரியை தடை செய்ய வலியுறுத்தல் : காவல் நிலையம் முன் கிராம மக்கள் முற்றுகை

புதன் 8, மே 2024 8:31:40 AM (IST)



சாத்தான்குளம் அருகே கல்குவாரியை தடை செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் கிராம மக்கள் குவிந்து புகார் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி ( 47). இவர், கடந்த மாதம் அதே பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்குவாரி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். இந்த நிலையில் கல்குவாரி உரிமையாளர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மாடசாமி பணம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர். 

இதனை அறிந்த மாடசாமி மற்றும் நெடுங்குளம் கிராமமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு திரண்டு சென்றனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரனிடம், மாடசாமி மீது கல்குவாரி உரிமையாளர் பொய்யான புகார் தெரிவித்துள்ளார். அவரது மனுவை நிராகரிக்க வேண்டும். கல்குவாரியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர். 

இதுகுறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார்.அப்போது, கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக நெடுங்குளம் கிராம மக்களிடம் கையெழுத்து வாங்கி புகார் அளித்தால், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை கொடுத்து விட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory