» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: காவடி எடுத்து வந்த பக்தர்கள்!

செவ்வாய் 7, மே 2024 12:08:35 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில்  வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கமுதி சாயல்குடி உட்பட பல கிராமங்களில் இருந்து மயில் காவடி எடுத்து வந்த பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் நேற்று தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவரும் பாதையாத்தியாக திருச்செந்தூர் புறப்பட்டு சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory