» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை தேரோட்டம்

செவ்வாய் 7, மே 2024 8:42:11 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது.

துாத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் முதலாவது தலமாகவும், சூரியனுக்கு அதிபதியாகவும் விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 2ல் சுவாமி கள்ளபிரான், காய்சினிவேந்த பெருமாள், எம்இடர்கடிவான், பொலிந்து நின்றபிரான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. இரவில் கருடவாகனத்தில் குடவரை பெருவாயில் எதிர் சேவையும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சுவாமி கள்ளபிரான் அதிகாலையில் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், 'கோவிந்தா, கோபாலா' என்ற கோஷங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது.

திருத்தேர் ஓடிய வீதிகளில் கோவில் நிர்வாகம் சார்பில், டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தவர்களுக்கு, பொதுமக்கள் சார்பில் மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. கடும் வெயிலை பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory