» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% பேர் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தேர்ச்சி!

திங்கள் 6, மே 2024 10:22:52 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96.39 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96.39 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். 

பிளஸ் 2 பொதுத் தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 8155 மாணவர்கள் எழுதினர். இதில் 7681 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 10423பேர் தேர்வெழுதியதில் 10,227பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18,578பேர் தேர்வு எழுதினர் இதில் 17,908 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.39 ஆகும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 203 பள்ளிகளில் 74 சதவீதம் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 56 அரசு பள்ளிகளில் 13 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் மாநிலத்தில் 7வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 97.36 சதவீதம் தேர்ச்சியுடன் 5ஆம் இடம் பிடித்திருந்தது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனினும், பெருமழை வெள்ள காலக்கட்டத்தில் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வெழுதி சாதனை படைத்துள்ளனர் என்று மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி பாராட்டு தெரிவித்தார். 

தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் முலம் அறிந்து கொள்ளலாம். மேலும், பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏராளமான மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகளில் குவிந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory