» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சித்திரை திருவிழா தேரோட்டம்: சாலையில் உள்ள வேகத் தடைகளை அகற்ற கோரிக்கை!

திங்கள் 22, ஏப்ரல் 2024 3:07:09 PM (IST)



தூத்துக்குடியில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு சிவன் கோவில் ரத வீதிகளில் வேகத்தடையை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுரை  ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 14.4.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 10ஆம் நாளான 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர் சுற்றிவரும் ரத வீதியில் தற்போது 2 வேகத்தடை  அமைக்கப்பட்டுள்ளது. 

திருவிழா அன்று பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி தேர் இழுத்து நிலைக்குக் கொண்டு வருவார்கள். வேகத்தடை அமைந்துள்ளதால் தேர் இழுப்பதில் சிரமமும், வேகத்தடையில் ஏறி இறங்கும்போது உயரமான தேர்களில் நடுக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி 2 வேகத்தடைகளை உடனடியாக நீக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.   

இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாவட்ட துணை தலைவர் ஆதிநாதன் ஆழ்வார், மேற்கு மண்டல தலைவர் சுதாகர், மேற்கு மண்டல துணைத் தலைவர்கள் ஆறுமுகம், கருப்பசாமி, பாண்டுரங்கம் உள்ளிட்டோர் கலந்து காெண்டனர். 


மக்கள் கருத்து

ராஜேஷ் செல்வரதிApr 22, 2024 - 06:16:34 PM | Posted IP 162.1*****

சிறப்பான நடவடிக்கை. எனினும் அதிகாரிகள் தாமாகவே முன்கள பணிகளை மேற்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory