» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அயோத்தி இயக்குனர் மந்திரமுர்த்திக்கு வரவேற்பு

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:48:06 PM (IST)



வசவப்புரத்தில் அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமுர்த்திக்கு ஆதிச்சநல்லூர் தொல்லியல் பாதுகாப்பு கழகம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கடந்த வருடம் திரைக்கு வந்து பல்வேறு விருதுகளையும், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்ற திரைப்படம் அயோத்தி. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். மனித நேயத்தினை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப் படத்தினை இயக்கியவர் மந்திர முர்த்தி. இவர் நெல்லை மாவட்டம் சங்கணாங்குளத்தினை சேர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து விட்டு தூத்துக்குடி விமான நிலையத்தின் வழியாக சென்னை செல்ல வந்தார்.

அவரை வசவப்பபுரத்தில் வைத்து பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் பாதுகாப்பு கழகம் சார்பில் நிறுவனர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு தென்காசி மாவட்டம் தோரணமலையில் சித்திரை புத்தாண்டையொட்டி விருது வழங்கப்பட்டது. 

எதிர்பாரத விதமாக அந்த விருதை அன்று இயக்குனர் மந்திர மூர்த்தி வாங்க வருகை தர முடியவில்லை. எனவே அந்த விருதை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் ஏற்பாட்டில், தெற்கு காரசேரி கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனரின் தந்தை ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory