» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் உட்பட 2பேருக்கு அரிவாள் வெட்டு : தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:38:25 PM (IST)

சாத்தான்குளம் அருகே பெண் உட்பட 2பேரை வெட்டிய தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சுடலைமுத்து (20). சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இதுபோல் சாத்தான்குளம் அருகேயுள்ள படுக்கப்பத்து கீழத்தெருறைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி சுகன்யா(33). கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து உடன்குடி அருகே தேரியூரில் குழந்தைகளுடன் இருந்தபோது.

இவருக்கும் சுடலைமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் நட்புக்கு சுகன்யாவின் உறவினர் ரத்தினசாமி மகன் வினித்ராஜ், எதிர்ப்பு தெரிவித்தது சுடலைமுத்துவை கண்டித்துள்ளார். இதனால் சுடலை முத்துவுக்கும் இருவருக்கும் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் நேற்று சுடலைமுத்து சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து - காந்திநகர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். 

தகவல் அறிந்து அங்கு வந்த சு வினித்ராஜ், அவரது மகன் பாரத் ஆகிய இருவரும், சுடலைமுத்துவிடம் சுகன்யாவிடம் பழகக்கூடாது என்று கண்டித்தனராம். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தந்தை, மகன் இருவரும் சேர்ந்து சுடலை முத்துவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வினித் ராஜ், பாரத் ஆகிய இருவரும் படுக்கபத்தல் உள்ள வீட்டில் இருந்த சுகன்யாவையையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சுடலை முத்து அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா மற்றும் போலீசார் வழக்குபதிந்து தாக்குதலில் ஈடுபட்ட வினித்ராஜ், அவரது மகன் பாரத் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory