» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் : தூத்துக்குடியில் ஹரி பேட்டி !

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 7:51:16 PM (IST)



நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்  என்று திரைப்பட இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹரியின் 17வது திரைப்படமான 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். இதில் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, கெளதம் வாசுதேவ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடத்துள்ளனர். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் 'ரத்னம்' படத்தின் ப்ரோமோஷன் காட்சி வெளியிடப்பட்டது.

இதில் இயக்குநர் ஹரி கலந்து கொண்டு தியேட்டருக்கு வந்த பொதுமக்களுடன் அமர்ந்து ப்ரோமோஷனை பார்த்து ரசிகர்களிடம் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஹரி, ”இது எனக்கு 17வது படம். இந்தப் படத்தின் கதை ஆந்திர மாநிலம் வேலூர், சித்தூர் மற்றும் தமிழ்நாடின் திருத்தணி பகுதிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வடமாவட்டங்களை மையமாக வைத்து படம் எடுத்துள்ளோம். நடிகர் விஷாலின் 'மார்க் ஆண்டனி' வெற்றிப்படமாக அமைந்தது. அதே போல் இந்த படமும் வெற்றிப் படமாக அமையும்” என்றார்.

மேலும், "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்தால் மகிழ்ச்சி. நடிகர் விஜய் மற்றும் விஷால் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். வரவேற்கிறேன். எனது படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இல்லை. விரைவில் போலீஸ் கதை அம்சம் கொண்ட படத்தை எடுக்க உள்ளேன். திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஓடிடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சினிமாவுக்கு கூடுதல் பலம் தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கில்லி' படத்திற்கு கூடியுள்ள கூட்டம் சினிமா எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நல்ல சினிமாவைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை காட்டுகிறது.” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory