» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபர் அடித்துக் கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்!!
சனி 20, ஏப்ரல் 2024 8:47:44 PM (IST)
தூத்துக்குடியில் வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், அ.சண்முகபுரம் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் மாரியப்பன் (22). மீனவர். இவர் இன்று மாலை 6 மணி அளவில் ஜாகிர் உசேன் நகரில் உள்ள பொது இடத்தில் வைத்து நண்பர்கள் சில பேருடன் மது குடித்தார்களாம். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறில் ஆத்திரம் அடைந்தஅவரது நண்பர்கள் மாரியப்பனை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)
