» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணி இடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சனி 20, ஏப்ரல் 2024 5:00:08 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தற்போது மேனேஜிங் டைரக்டர், தலைமைச் செயல் அதிகாரி (Managing Director and Chief Executive Officer) பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன. 

கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (Graduate Degree அல்லது Post Graduate Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 31.03.2024 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 45 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் TMB வங்கி விதிமுறைப்படி மாத ஊதியத்தை பெறுவார்கள்.

தேர்வு முறை: பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணைய தளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 05.05.2024 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/newregisterbase.do?id=MDC&post=MDC20242501 என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம். இந்த பணியிட விளம்பர அறிவிப்பு தொடர்பான விவரங்களைப் பெற https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_MDC20242501.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.


மக்கள் கருத்து

BabuApr 22, 2024 - 01:12:28 PM | Posted IP 172.7*****

I am finished bachelor of business administration good communication skills hard working person provide me this job

DhanrajApr 20, 2024 - 07:48:37 PM | Posted IP 172.7*****

I Like This Line

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory