» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாக்கு என்னும் மையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு: 24 மணி நேரம் கண்காணிப்பு!

சனி 20, ஏப்ரல் 2024 4:30:39 PM (IST)தூத்துக்குடியில் வாக்கு என்னும் மையத்திற்கு  5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரம் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில்  பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு என்னும் மையமான தூத்துக்குடி அரசு வஉசி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது 

இந்த பாதுகாப்பு  அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெகாரா மற்றும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்பு இரண்டு பூட்டுகள் போடப்பட்டு அவற்றிற்கு சீல் வைக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தனது சீலை பதிவு செய்தார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்திற்கு  5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் சிசிடிவி மூலம் வாக்கும் என்னும் மையம் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory