» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாக்குச்சாவடியில் புகுந்த பாம்பு : சமூக வலைதளங்களில் வைரல்!!

சனி 20, ஏப்ரல் 2024 4:20:55 PM (IST)தூத்துக்குடியில் வாக்குச்சாவடியில் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் அங்கே உள்ள துறைமுக பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க சென்றுள்ளனர். அப்போது வாக்குச்சாவடிக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் ஓட்டு போட வந்தவர்கள் மற்றும் வாக்கு சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடியை மையத்தை விட்டு வெளியே வந்துள்ளனர் 

இதைத் தொடர்ந்து சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து துறைமுக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாக்குச்சாவடிக்கும் நுழைந்த நல்ல பாம்பை  பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். தூத்துக்குடி வாக்கு சாவடிக்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory