» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர் அட்டை இருந்தும் வாக்கு இல்லை : அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் ஏமாற்றம்!!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 11:25:14 AM (IST)



விளாத்திகுளம் அருகே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வாக்காளர் அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் கிராம மக்கள் திரும்பிச் சென்றனர். 

தமிழ்நாடு முழுவதும் இன்று மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 16-வது வாக்குச்சாவடியான பேரிலோவேன்பட்டியில் வாக்குச்சாவடியில் அக்கிராமத்தைச் சேர்ந்த சக்கம்மாள், ஞான சுந்தரி, பெருமாள்சாமி உள்ளிட்ட சில நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் சில நபர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இந்த வாக்குச்சாவடி மையத்தில் சற்று பதற்றமான சூழ்நிலை வருகிறது. அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட நபர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் அதே கிராமத்தில் சொந்த வீட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில் இதற்கு முன் பல தேர்தலில் வாக்களித்து இருந்தும் கூட வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து தற்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் வாக்களிக்க மறுக்கப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோன்று கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் இன்னும் சில தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து விடுவதாக அவர்களை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் தினசரி கூலி வேலைக்கு சென்று வரும் இந்த நபர்கள் இன்று வேலைக்குச் செல்லாமல் ஜனநாயக கடமையாற்றுவதற்காக வாக்களிக்க சென்று நிலையில் அதிகாரிகள் சிலரின் அலட்சியத்தினால் தங்களது வாக்குரிமை மறுக்கப்பட்டதால் சோகத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory