» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு - ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, ஏப்ரல் 2024 5:32:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 நாளன்று பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு 19.04.2024 அன்று காலை 7 மணிக்கு தொடங்கு மாலை 6 மணி வரை நடைபெறும். மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் மூன்றாம் தளத்தில் உள்ள முத்து அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி இன்று (18.04.2024) பார்வையிட்டார். உடன் வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
