» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க நடவடிக்கை : ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பேட்டி!

வியாழன் 18, ஏப்ரல் 2024 4:59:52 PM (IST)குமரி மாவட்டத்தில் 199 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். .

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (19.04.2024) நடைபெறுவதையொட்டி அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலத்திலிருந்து நாகர்கோவில் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (18.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 15,55,096 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் (229) ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,45,871, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,49,308, மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 64 என மொத்தம் 2,95,243 வாக்களர்களும், 

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் (230) ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,30,590, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,34,664 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 என மொத்தம் 2,65,267 வாக்காளர்களும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் (231) ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,35,954 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,33,239 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 என மொத்தம் 2,69,206 வாக்காளர்களும்,

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் (232) ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,21,146, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,20,398 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 23 என மொத்தம் 2,41,567 வாக்காளர்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் (233) ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,17,694 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,19,685 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 என மொத்தம் 2,37,382. 234 

கிள்ளியூர் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,24,872, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,21,540 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 என மொத்தம் 2,46,431 வாக்காளர்களும் என மொத்தம் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,76,127 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,78,834 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 135 என மொத்தம் 15,55,096 வாக்காளர்கள் உள்ளார்கள்.

மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் 13 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றினை வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு சென்று வாக்களிக்கலாம். நமது மாவட்டத்தில் 1698 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டள்ளது. 

இந்த வாக்குச்சாவடி மையங்களில் 8152 அலுவலர்கள் பணியாற்ற உள்ளார்கள். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் எளிதில் வாக்குச்சாவடிக்கு செல்ல ஏதுவாக 5 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 5 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் மண்டல தலைவர்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 1104 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

இதில் 199 பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் அடங்கும். இந்த பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 650 வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிக்க ஏதுவாக ஒரு தன்னார்வலர் மற்றும் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச்சாடிகளும், பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஒரு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்ற அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து உங்களுடைய ஜனநாயக கடமையினை ஆற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார். ஆய்வில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மற்றம் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory