» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நான்கு மாத குழந்தையை கடத்திய கணவன், மனைவிக்கு தலா 3ஆண்டு சிறை தண்டனை
வியாழன் 18, ஏப்ரல் 2024 4:13:00 PM (IST)
நாகர்கோவிலில் 4 மாத குழந்தையை கடத்திய கணவன், மனைவிக்கு தலா 3ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தங்கி இருந்து ஊசி, பாசி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருபவர்கள், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி சேர்ந்தவர் முத்துராஜா, மனைவி ஜோதிகா (20). இவர்களுடைய 4 மாத கைக்குழந்தையை கடந்த 23 -7 - 2023 அன்று அதிகாலை ஒரு மணி அளவில் பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இது குறித்து வடசேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, பஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரவில் குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து கடத்தி சென்ற தெரிய வந்தது. தொடர் விசாரணையில் குழந்தை கடத்தி சென்றது அழகப்பபுரம் பொட்டல்குளத்தை சேர்ந்த நாராயணன் (50) அவருடைய மனைவி சாந்தி என்ற சஞ்சலா (50) என்பது தெரிய வந்தது.
போலீசார் தேடிய போது கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் என்ற இடத்தில் வைத்து குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தை கடத்தி சென்ற கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள ஜுடிசியல் மஜிஸ்ட்ரேட் இரண்டாவது கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட நாராயணன் மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகியோருக்கு தலா 3 -ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
