» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!

வியாழன் 18, ஏப்ரல் 2024 11:55:18 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில வாலிபர் தூக்குபோட்டு தற்காெலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள வடக்கு தோழப்பன் பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் உலகநாதன் மகன் பாலமுருகன் (37). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் குடுபத்தில் தகராறு ஏற்பட்டு மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்தாராம். 

அவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டாராம். இரண்டு மனைவிகளும் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்களே என்ற மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

SriiApr 19, 2024 - 02:27:07 AM | Posted IP 172.7*****

திமுக அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்னு

SaminthanApr 18, 2024 - 05:37:46 PM | Posted IP 162.1*****

குடி குடியை கெடுக்கும்

தமிழன்Apr 18, 2024 - 02:36:57 PM | Posted IP 162.1*****

காரணம் - அரசு டாஸ்மாக்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory