» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ்சில் நகை பறித்த 3 பெண்கள் கைது: பரபரப்பு தகவல்!!

வியாழன் 18, ஏப்ரல் 2024 8:37:43 AM (IST)

கும்பலாக பஸ்சில் ஏறி நகை பறித்த கோவில்பட்டியை சேர்ந்த 3 பெண்கள் சிக்கினர். இதில் இளம்பெண் ஒருவர் திருடிய பணத்தில் சொகுசு வீடு கட்டியது அம்பலமானது.

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வடக்குகரை விளை கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலுக்கண்ணு. இவருடைய மனைவி கமலாட்சி (62). இவர் கணபதிபுரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரின் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வேர்க்கிளம்பியில் இருந்து ஆற்றூர் செல்லும் பஸ்சில் ஏறினார். இந்த பஸ்சின் இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.

அதில் 3 பெண்கள் கமலாட்சியின் அருகில் நின்றபடி இருந்தனர். வீயன்னூர் அருகே பஸ் சென்ற போது அவர்கள் நைசாக கமலாட்சியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியின் கொக்கியை கழற்ற முயன்றனர். இதனை உணர்ந்த அவர் சுதாரித்துக் கொண்டு கையை தட்டி விட்டு சத்தம் போட்டார். உடனே வீயன்னூர் சந்திப்பில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அந்த சமயத்தில் 3 பெண்களும் பஸ்சில் இருந்து அவசர, அவசரமாக கீழே இறங்கி ஓடினர்.

தொடர்ந்து 3 பெண்களையும் பயணிகளும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் விரட்டி சென்று பிடித்து நைய புடைத்தனர். பின்னர் அவர்களை திருவட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு போலீசார் விசாரணை நடத்தியபோது 3 பேரும் முன்னுக்கு பின் முரணமாக தங்களது முகவரியை தெரிவித்தனர். போலீசைக் குழப்புவதற்காக முதலில் சேலம் மாவட்டம் அண்ணாநகர் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர்கள் என தவறான தகவலை அளித்தனர். 

இறுதியில் 3 பேரும் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், குமாரின் மனைவி காவேரி (38), மதுரை வீரன் கண்ணப்பன் மனைவி ஆஷா (28), மணி மனைவி தெய்வானை மல்லிகா (26) என்பதும் தெரியவந்தது.  இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

இதில் ஆஷா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் 3 பேரும் பஸ்களில் பயணம் செய்து பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோம். இவ்வாறு திருடி சம்பாதித்ததில் எனக்கு கோவில்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் சொத்துக்கள் உள்ளன. தற்போது ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, நானும் எனது ஊரைச்சேர்ந்த தெய்வானை மல்லிகா மற்றும் காவேரி ஆகியோருடன் சேர்ந்து மூதாட்டியிடம் நகையை பறித்தபோது மாட்டிக் கொண்டோம். இவ்வாறு ஆஷா வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory