» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிலதிபா் வீட்டை கண்காணித்த பறக்கும் படை.. தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 18, ஏப்ரல் 2024 8:22:13 AM (IST)

தூத்துக்குடியில் வாக்காளா்களுக்கு பண பரிமாற்றம் செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, தோ்தல் பறக்கும்படையினா் தொழிலதிபா் வீட்டைச் சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மட்டகடை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபா் வீட்டில் இருந்து வாக்காளா்களுக்கு பண பரிமாற்றம் செய்வதாக பறக்கும்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து நேற்று நள்ளிரவில் தொழிலதிபா் வீட்டைச் சுற்றி பறக்கும்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

முன்னதாக நேற்று காலையில் வருமானவரித் துறை சோதனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், பணபரிமாற்றம் செய்வதாக வந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. பறக்கும்படை போலீசார் கண்காணிப்பு பணி காரணமாகஅப்பகுதியில் திடீா் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

MADASAMYApr 18, 2024 - 04:20:52 PM | Posted IP 162.1*****

RS 300 TMK VILATHILKULAM , OTTAPIDRAM, KOVILPATTI AREA

தமிழ்ச்செல்வன்Apr 18, 2024 - 11:17:38 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மாநகர் முழுவதும் நேற்று வாக்காளர்களுக்கு 300 ரூபாய் வீதம் திமுகவினரால் வழங்கப்பட்டு விட்டது. ஒருசில இடங்களில் தராமல் விடுபட்டதாக வார்டு செயலாளர்களிடம் மக்கள் புகார் செய்தனர்... இதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படுகிறதா? என பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நல்லா இருக்கு தேர்தல் சனநாயகம்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory