» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்

புதன் 17, ஏப்ரல் 2024 5:53:27 PM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். 

தமிழகத்தில் வருகின்ற ஏப்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடியில் விவிடி மெயின் ரோடு, அண்ணாநகர் 7வது தெரு, டூவிபுரம் 5வது தெரு சந்திப்பில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை தொண்டர்களுடன் வாகனப் பேரணியாக சென்று நிறைவு செய்தார். இதுபோல் அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியின் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory