» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் டைட்டல் பார்க் அமைக்கப்படும் : திமுக வேட்பாளர் கனிமொழி வாக்குறுதி!!

புதன் 17, ஏப்ரல் 2024 12:13:07 PM (IST)நாசரேத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு நூற்பாலை அமைந்திருந்த இடத்தில் டைட்டல் பார்க் அமைக்கப்படும் என்று தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார். 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கருணாநிதி நாசரேத் பேருந்து நிலையம் மக்களிடையே பேசியதாவது: நாசரேத்தில் கூடியிருக்கும் வாக்காளர்களின் முகத்தில் ஏற்பட்டிருக்கும் முகமலர்ச்சியை பாரக்கின்ற போது வெற்றி நிச்சயம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியை நான் எனது 2-வது தாய் வீடாக கருதி பணி ஆற்றி வருகிறேன். 

உங்களது அன்பைப் பெற்ற நான் மீண்டும் உங்களோடு பணி யாற்றக் கூடிய வாய்ப்பை எனக்கு தாருங்கள். நாசரேத்தில் அமைந்திருந்த திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை தற்போது மூடிக்கிடக்கிறது. மூடிக்கிடக்கும் இந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் அதைவிட சிறந்த தொழிற்சாலைகளோ அல்லது பெரிய தொழிற்சா லைகளோ அல்லது டைட்டில் பார்க் திட்டமோ கொண்டு வரப்படும்.

நாசரேத் பேரூராட்சியில் எனது தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஜி.எஸ்.டி. பிரச்சனைகளினால் சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. குழப்பங்கள் விரைவில் சரி செய்யப்படும். சமீபத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட் டவர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 6,000 த்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.ஆனால் ஒன்றிய அரசின் பிரதமர் மோடியோ தமிழகத்திற்கு நிவாரணமும் தரவில்லை, நிதியும் தரவில்லை.

எனவே ஒன்றிய அரசை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தல் நடக்காது. சர்வாதிகாரம்தான் ஓங்கும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 30லட்சம் வேலை வாய்ப்பு பணியிடங்கள் நிரப்பப்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்று வோம். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளருடன் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி எஸ் அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மகளிர் அணி ஜெசி பொன் ராணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். 

முன்னதாக திமுக வேட்பாளருக்கு நகர செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏஐடியூசி கிருஷ்ணராஜ், நகர காங். தலைவர் செல்வகுமார், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், துணைத் தலைவர் அருண் சாமுவேல், திமுக மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், கஸ்தூரி, காங்கிரஸ் பிரமுகர்கள் எட்வர்ட் கண்ணப்பா, செல்வின், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

அதுApr 17, 2024 - 01:06:51 PM | Posted IP 162.1*****

எந்த இடம்?

JOSEPH, NAZARETH.Apr 17, 2024 - 12:27:09 PM | Posted IP 172.7*****

கடந்த முறை எம்பி ஆன உடன் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் அடிக்கல் நாட்டிய பர்னிச்சர் பூங்கா என்ன ஆச்சுன்னு நாசரேத்து ஊப்பீக்கள் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory