» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது!

புதன் 17, ஏப்ரல் 2024 10:14:22 AM (IST)தூத்துக்குடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தாளமுத்து நகர் பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ய்பபட்டுள்ளது. இதனை சட்ட விரோதமாக லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடியில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாளமுத்து நகர் கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த முத்து மகன் சங்கர் (28) என்பவரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் டிஎம்பி காலனியைச் சேர்ந்த செல்வம் என்பவரை தேடி வருகின்றனர். 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார். தூத்துக்குடியில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மக்கள் கருத்து

கஞ்சா குடிக்கிApr 19, 2024 - 01:52:01 PM | Posted IP 172.7*****

கஞ்சா நல்லது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory