» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.21, மே 1ல் மதுக் கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 4:55:57 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.21, மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள், மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில், மகாவீர் ஜெயந்தி (நாள்: 21.04.2024) மற்றும் மே தினம் (நாள்: 01.05.2024) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-ன் படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல்2, எப்.எல்3 உரிமதலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
