» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள்: தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 3:27:38 PM (IST)கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் 254வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கட்சியினர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் டிரிப்போலின், அருணா ராணி, அந்தோணியம்மாள், ஜெகதீசன், பண்டாரப் பாண்டியன்  ஜாக்சன், ரியாஸ்,  தங்க முத்து,ராபின்,  மனோ, ஷேக், ஷாம், ஜான், துறைவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநகர தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் சுப்பையா, நிர்வாகிகள், பாலா, மாரியப்பன் அந்தோணி, விஜயகுமார், சுதாகர், பாஸ்கர் உள்ளிட்டோர் சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


மக்கள் கருத்து

Beno FernandoApr 16, 2024 - 04:00:07 PM | Posted IP 172.7*****

தளபதி ஆட்சி 2026 ல் வாழ்த்துக்கள் சகோதரி்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory