» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடிக்கு லாரிகளில் வந்த தென்னை மரங்கள் : கடல்வழியாக மாலத்தீவுக்கு ஏற்றுமதி!!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 10:13:45 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து சுமார் 200 தென்னை மரங்கள் கடல் வழியாக கப்பலில் மாலத்தீவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கற்கள், மணல், சிமென்ட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து  சுமார் 200 தென்னை மரங்கள் கடல் வழியாக மாலத்தீவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இதற்காக கோவையில் இருந்து கண்டெய்னர் லாரிகளில் தென்னை மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தென்னை மரங்கள் காயாமல் இருப்பதற்காக நவீனமுறையில் உரம் மண் மூலம் பதப்படுத்தப்பட்டு பாலித்தீன் பைகள் மூலம் வேர்கள் காயாதவண்ணம் பாதுகாக்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனை மாலத்தீவில் இறக்குமதி செய்யப்பட்டு அங்கு நவீனமுறையில் நடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

Chandrasekaran SApr 17, 2024 - 03:53:15 PM | Posted IP 162.1*****

Ettu tavran saiayal China Ku support panura panda Ku poi coconut tree anpurkala..... Kanimoli Yenna panuriga, Stalin yenaa panurika....

P.M.GangadharanApr 17, 2024 - 07:30:54 AM | Posted IP 162.1*****

ஆட்சியாளர்களுக்கான வேண்டுகோள். இந்தியாவல் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு பெருகும்,நாட்டிற்கும் வருவாய் ஈட்டித்தரும்.ஆனால் இயற்கையின் கொடையான *மணல்,கற்கள்* போன்றவற்றை ஏற்றுமதி செய்யாதீர்கள்* .உங்களுக்கு அந்த உரிமையே இல்லை.இயற்கை வளங்கள் அடுத்த தலைமுறையின் சொத்து.நல்ல ஆட்சியாளர்களாக இருந்தால் உங்களுக்கான பார்வை இப்படித்தான் இருக்கும்.கனிமங்கள் திருடி ஏற்றுமதி செய்வது கேவலம்.

செல்வகணேசன்Apr 16, 2024 - 09:56:36 PM | Posted IP 162.1*****

எதிரியாக நம்மை பாவித்து எதிரி நாட்டுடடன் கூட்டு சேர்ந்தவனுக்கு அனுப்பலாமா நண்பரே

யாரு ?Apr 16, 2024 - 12:02:26 PM | Posted IP 172.7*****

இந்தியாவுக்கு எதிரியாக செயல்படும் மாலத்தீவுக்கு இங்குள்ள எவண்டா அனுப்பினது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory