» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 8:17:20 AM (IST)

தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவன சட்ட ஆலோசகா் வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருடிய மா்ம நபா்களைப் போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சோ்ந்த மாயாண்டி மகன் பொன்ராஜ் (40). தனியாா் ஷிப்பிங் நிறுவன சட்ட ஆலோசகா். இவா் கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றாராம். பின்னா் இவா் நேற்று முன்தினம் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் தங்க மோதிரம், வைர காதணி, வெள்ளி பொருள்கள் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் வடபாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி பணம், நகைகளைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory