» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 17 மாலுமிகளை விடுவிக்க கோரிக்கை!

திங்கள் 15, ஏப்ரல் 2024 12:31:42 PM (IST)ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 3 தமிழர்கள் உட்பட 17 இந்திய மாலுமிகளை மீட்க வேண்டும் என்று கப்பல் மாலூமிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கடந்த 12ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதி வழியாக மும்பை நவ சேவா துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த எம்எஸ்வி அரைஸ் என்ற கப்பலில் ஹெலிகாப்டர் மூலம் ஈரான் நாட்டு கடற்படை இறங்கி அதிலிருந்த 17 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 25 மாலுமிகளை சிறை பிடித்து ஈரான் நாட்டு துறைமுகத்திற்கு சிறைபிடித்து கொண்டு சென்றுள்ளது. தற்போது அந்த கப்பலிலேயே சிறை பிடிக்கப்பட்ட 25 மாலுமிகளும் உள்ளனர். 

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் சிறைப்பிடிக்கப்பட்ட 17 இந்திய மாலூமிகளில் 3பேர் தமிழர்கள். அதில் 2 மாலுமிகள் தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை மீனவ கிராமத்தை சேர்ந்த பிரைன்ஸ்டைன் கொந்தாஸ் மற்றும் புன்னக்காயல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செலேஸ்டின் மைக்கேல் ஆகியோர் என்பது தெரிய வந்தது. தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே போர்சுழல் உருவாகியுள்ளதால் சிறைபிடிக்கப்பட்ட மாலுமிகளை எந்தவித பாதிப்பும் இல்லாமல் உடனடியாக மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கப்பல் மாலூமிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆலந்தலை கிராமத்தை சேர்ந்த கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் "ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டிடையே போர் நிலவி வரும் சூழ்நிலையில் சிறைபிடிக்கப்பட்டு ஈரான் நாட்டில் வாடி வரும் கப்பல் மாலூமிகளை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் மற்றும் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

Dhanabalan Fernando அவர்களேApr 16, 2024 - 08:22:00 AM | Posted IP 162.1*****

ஓ. ஈழத்திலே லட்சம் தமிழர்கள் காப்பாற்ற போன கண்ணு மொழி மாதிரியா?? மோடியால் முடியும். அமைதியாக இருங்கள் வெளியுறவுத்துறை ஜெயஷங்கரிடம் தெரிவித்து என்றான் தூதரிடம் பேச்சுவார்த்தை நடக்கும்.

Dhanabalan Fernando, AlanthalaiApr 15, 2024 - 11:26:34 PM | Posted IP 172.7*****

கப்பல் மாலுமிகளை மீட்பதற்கு தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை அணுகுவது சிறப்பானதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory