» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொட்டும் மழையில் மேயர் வாக்குசேகரிப்பு!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 8:28:46 PM (IST)
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி கொட்டும் மழையில் வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி கொட்டும் மலையில் மேயர் ஜெகன் பெரியசாமி இந்தியா கூட்டணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு ஸ்டேட் பேங்க் காலனி சத்ய விநாயகர் புரம் எழில் நகர் கந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவர் சேகர், கவுன்சிலர் தெய்வேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் இசக்கிமுத்து பெரியசாமி, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்து துரை, வேல்பாண்டி, வட்ட செயலாளர் ரவிந்திரன், பகுதி பொருளாளர் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
NameApr 13, 2024 - 03:03:25 PM | Posted IP 162.1*****