» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஜக ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் ஐக்கியம்!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 4:51:58 PM (IST)
மாவில்பட்டி பாஜக ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன், மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் மேற்கு ஒன்றியம், மாவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் (பாஜக) எல்லப்பன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி பொறுப்பாளர் ஜெயசக்தி, கிளைசெயலாளர் குருசாமி, அவைத்தலைவர் கந்தவேல், மாவில்பட்டி ஊர் நாட்டாமை பரமசிவம், திமுக நிர்வாகிகள் கருப்பசாமி,ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.