» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நிழல் இல்லா தினம் செயல் விளக்க பயிற்சி

வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:02:52 PM (IST)தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நிழல் இல்லா நாள் குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப்ஒருங்கிணைப்பாளர் சம்பத் சாமுவேல் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு மாணவர்களை வட்ட வடிவில் நிற்க வைத்து வருடத்தில் இருமுறை நிகழும் வானவியல் நிகழ்வான நிழல் இல்லா தினத்தில் உச்சி பொழுதினை 12.18 மணியளவில் காண பரிசோதனைகளை செய்து காண்பித்தினர். இதில் தலைமை ஆசிரியர் ஜாய்ஸ் விக்டோரியா மாணவவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory